web analytics

நகரத்தார் பிரீமியம் லீக் கிரிக்கெட் போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கிய CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar presents prizes to winners of the Nagarathar Premium League cricket tournament at Thiagarajar College of Engineering, Madurai

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நகரத்தார் பிரீமியம் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு CTR நிர்மல் குமார் பரிசுகள் வழங்கினார்.

சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar attends the convocation ceremony at Chermathai Vasan Women's College and congratulates graduating students

மதுரை மாவட்டம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவிகளுக்கு CTR நிர்மல் குமார் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மதுரை மருத்துவக் கல்லூரி 67-வது பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar presents degrees to graduating students at the 67th convocation of Madurai Medical College

மதுரை மருத்துவக் கல்லூரியின் 67-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி CTR நிர்மல் குமார் வாழ்த்தினார்.

அரசு இராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar administers polio drops to children at Government Rajaji Hospital in Madurai

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் CTR நிர்மல் குமார் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

நாகமலை புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar provides welfare assistance to the public at Nagamalai Pudukottai in Madurai

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை CTR நிர்மல் குமார் வழங்கினார்.

தமிழ்நாடு மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar releases the Tamil Nadu Electricity Department White Paper

தமிழ்நாடு மின்சாரத் துறையின் வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கான முக்கிய ஆவணமாக அமையும் வெள்ளை அறிக்கையை CTR நிர்மல் குமார் வெளியிட்டார்.

TNPDCL-க்கு தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

CTR Nirmal Kumar presents appointment orders to newly selected TNPDCL assistant engineers and assistant accounts officers in Chennai

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், TNPSC மூலம் TNPDCL-க்கு தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

சட்டப் படிப்பு மாணவர்களுக்கு சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிய CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar presents admission allotment orders to top-ranking students of Ambedkar Law University

டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026–27 கல்வியாண்டிற்கான 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை, கட்-ஆஃப் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு CTR நிர்மல் குமார் வழங்கினார்.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி.யை சந்தித்த CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar meets Durai Vaiko MP for a courtesy meeting

மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, CTR நிமல் குமாரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.