
இன்று (12.09.2026), மதுரை மாவட்டம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, புதுமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வசதிகளை பார்வையிட்டேன்.
மேலும், திருக்குட நன்னீராட்டு பெருவிழாவிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.
இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மாநகர காவல் ஆணையாளர் திரு. எஸ். ராஜேந்திரன், இ.கா.ப., அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.வி. கருப்பையா அவர்கள், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ம. விஜய் அவர்கள், மாநகராட்சி மேயர் (பொ) / துணை மேயர் திரு. தி. நாகராஜன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ் குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.