web analytics
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்த CTR நிர்மல் குமார்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட CTR நிர்மல் குமார்.

இன்று (16.09.2026), மதுரை மாவட்டம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட போது.

இந்நிகழ்வில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷ் அவர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., அவர்கள், கண்காணிப்பு அலுவலர் திரு. கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., அவர்கள், அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சென்னை, திரு. ப. மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள், இயக்குநர், நகராட்சி நிர்வாக இயக்ககம், சென்னை, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மரு. டி.ஜி. வினய், இ.ஆ.ப., அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. அ. கல்லாணை அவர்கள், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டி அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.வி. கருப்பையா அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.எம். கோபிசன் அவர்கள், மாநகராட்சி மேயர் (பொ) / துணை மேயர் திரு. தி. நாகராஜன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ் குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

CTR Nirmal Kumar