web analytics
CTR Nirmal Kumar presents degrees to graduating students at the third convocation of Coimbatore Government Law College
கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியின் 3-வது பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கிய CTR நிர்மல் குமார்.

கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியின் 3-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சட்டம் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; அது சமூக நீதியையும், மனிதநேயத்தையும் காக்கும் உயரிய பொறுப்பாகும். இன்று பட்டம் பெறும் ஒவ்வொரு இளம் சட்டவீரரும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில், இளைஞர்களின் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் நீதிசார் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.

பட்டம் பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்.

CTR Nirmal Kumar