web analytics

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar meets Tamil Nadu Chief Minister C. Joseph Vijay and conveys birthday wishes

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த CTR நிமல் குமார், அந்தச் சந்திப்பு தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமைந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு CTR நிர்மல் குமார் நன்றி

CTR Nirmal Kumar with Su Venkatesan MP and Manickam Tagore MP at the Thiruparankundram Assembly office inauguration

திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைக்க எங்களது அழைப்பை, தங்களது இடைவிடாத பணிகளுக்கு மத்தியிலும் ஏற்று வருகை தந்து நிகழ்வை சிறப்பித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. ப. மாணிக்கம் தாகூர் அவர்களுக்கும் எனது சார்பாகவும், திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருப்பரங்குன்றம் வலையங்குளத்தில் நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் பங்கேற்ற CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar participates in a welfare assistance and annadanam event at Valaiyangulam in Madurai

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வலையங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் CTR நிமல் குமார் கலந்து கொண்டார்.

திருப்பரங்குன்றத்தில் கபடி போட்டியை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar inaugurates a Kabaddi competition in Avaniyapuram, Madurai

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற கபடி போட்டியை CTR நிமல் குமார் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததானம் வழங்கிய CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar donates blood at a blood donation camp in Madurai

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று 20.06.2026, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியின் வடக்கு பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினோம். இரத்ததானம் என்பது உயிர்களை காக்கும் உயரிய மனிதநேயப் பணியாகும். இந்நிகழ்வில் இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். CTR Nirmal Kumar

ஆண்டிபட்டியில் தேனி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் இணைப்பு விழாவில் பங்கேற்ற CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar participating in the Theni district executives consultation meeting and party joining event at Andipatti

தேனி மாவட்டம் சார்பாக ஆண்டிபட்டியில் நடைபெற்ற மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் CTR நிமல் குமார் கலந்து கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்த CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar meets Madras High Court Chief Justice Susruth Arvind Dharmadhikari

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்களை CTR நிமல் குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

மதுரையில் 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயம்

மதுரை பசுமலை பகுதியில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு பதக்கங்கள் வழங்கிய CTR நிமல் குமார்

மதுரை பசுமலை பகுதியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். CTR நிமல் குமார் போட்டியை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழ்நாடு உணவுப்பொருள் தயாரிப்பாளர் சங்க விழாவில் கலந்து கொண்டு பேசிய CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar addresses the Tamil Nadu Food Manufacturers Association event in Madurai

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு உணவுப்பொருள் தயாரிப்பாளர் சங்கத்தின் பாராட்டு விழா மற்றும் கருத்தரங்கில் CTR நிமல் குமார் கலந்து கொண்டு, சிறு மற்றும் குறு வியாபாரிகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தார்.

பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்தார் CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar extends Bakrid wishes to Muslim brothers and sisters

பக்ரீத் திருநாளை முன்னிட்டு, ஈகை, இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு மேலும் வளர வேண்டும் என CTR நிமல் குமார் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.