
30.05.2026 அன்று மதுரையில் தமிழ்நாடு உணவுப்பொருள் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழா மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினேன்.
சிறு மற்றும் குறு வியாபாரிகளின் சங்க பாதுகாப்பிற்கும், உறுப்பினர்களின் நலனுக்காகவும், மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என உறுதியளிக்கப்பட்டது.
இவ்விழாவில் மதுரை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. விஜய் அன்பன் கல்லானை, திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டி, திரு. எம்.எம். கோபிசன், திரு. எஸ். கார்த்திகேயன் உள்ளிட்டோர் மற்றும் பல்வேறு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.