web analytics
CTR Nirmal Kumar attends the promotion ceremony for 700 Assistant Engineers promoted as Assistant Executive Engineers at Tamil Nadu Electricity Board headquarters in Chennai
தமிழ்நாடு முழுவதும் உள்ள 700 உதவிப் பொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்.

சென்னை மின்வாரிய தலைமையகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 700 உதவிப் பொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டேன்.

முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, திறமையான மனிதவளத்தை ஊக்குவித்து, பொதுமக்களுக்கு தரமான மற்றும் தடையற்ற மின்சேவையை வழங்குவதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருகிறது.

பதவி உயர்வு என்பது ஒரு அங்கீகாரம் மட்டுமல்ல; மேலும் அதிக அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய புதிய வாய்ப்பாகும். பதவி உயர்வு பெற்ற அனைத்து அதிகாரிகளும் மின்வாரியத்தின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும் சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

பதவி உயர்வு பெற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

CTR Nirmal Kumar