web analytics
CTR Nirmal Kumar inaugurates the newly constructed Madurai North Taluk Office building at Chinna Chokkikulam
ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்த CTR நிர்மல் குமார்.

நேற்று (22.08.2026) சின்ன சொக்கிகுளத்தில் ரூ. 4.06 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டேன்.

மக்களுக்குத் தேவையான அரசு சேவைகள் எளிதாகவும், விரைவாகவும் கிடைக்கும் வகையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது நமது அரசின் முக்கிய நோக்கமாகும்.

மக்கள் நலன் சார்ந்த பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து முன்னெடுப்போம்.

இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மதுரை சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

CTR Nirmal Kumar