
இன்று (04.08.2026) சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள MHAA அரங்கில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சொற்பொழிவுத் தொடர் (Lecture Series) நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினேன்.
சட்டத் துறையின் வளர்ச்சிக்கும், வழக்கறிஞர்களின் அறிவுத்திறன் மேம்பாட்டிற்கும் இத்தகைய கருத்துப் பரிமாற்ற நிகழ்வுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. சட்டத்தின் மாண்பை உயர்த்தி, நீதி வழங்கும் அமைப்பை மேலும் வலுப்படுத்த அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்ற நம்பிக்கையைப் பகிர்ந்துகொண்டேன்.
இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஆர்.சி. பால் கனகராஜ், துணைத் தலைவர் திரு. எஸ். சசிகுமார், செயலாளர் திரு. எஸ். அறிவழகன், பொருளாளர் திரு. ஜி. ராஜேஷ் மற்றும் மூத்த, இளநிலை செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.