
இன்று (28.06.2026) மதுரை மாவட்டம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த போது.
பட்டம் என்பது கல்விப் பயணத்தின் நிறைவு மட்டுமல்ல; சமூகப் பொறுப்புணர்வுடன் புதிய சாதனைகளை நோக்கிப் பயணிக்கும் அடுத்த கட்டத்தின் தொடக்கமாகும்.
அறிவு, திறமை, தன்னம்பிக்கை ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு தங்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் உயரங்களை எட்டிட அனைத்து பட்டதாரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.