
இன்று மதுரை மருத்துவக் கல்லூரியின் 67-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி, அவர்களை வாழ்த்தியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
உயிர்காக்கும் உயரிய மருத்துவப் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து, மனிதகுலத்திற்கு சிறப்பான சேவையாற்றி, உலகம் போற்றும் மருத்துவர்களாக உயர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.