web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar ஆந்திர மாநில புயல் பாதிப்பு பகுதிகளில் மின் சீரமைப்புப் பணிக்காக 500 பணியாளர்கள் கொண்ட குழுக்களின் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த போது
ஆந்திர மாநிலத்தில் மின் சீரமைப்புப் பணிக்காக 500 பணியாளர்கள் கொண்ட குழுக்களின் பயணத்தைத் தொடங்கி வைத்த CTR Nirmal Kumar.

இன்று (02.11.2026), சென்னை மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க, ஆந்திர மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகத்தை விரைந்து சீரமைக்கும் பணிக்காக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் 500 பணியாளர்கள் கொண்ட மின்சீரமைப்புக் குழுக்களின் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தேன்.

இந்நிகழ்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர் / மின் வாரியத் தலைவர் திரு. ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் திரு. ம. கோவிந்த ராவ், இ.ஆ.ப., மின் பகிர்மானக் கழக இணை மேலாண்மை இயக்குநர் திரு. சீ. பாலச்சந்தர், இ.ஆ.ப., மின் பகிர்மானக் கழக இயக்குநர் திருமதி எல். லீனா மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

CTR Nirmal Kumar