
ஆனைக்குளம் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்!
இன்று (09.08.2026) மதுரை மாவட்டம், ஆனைக்குளம் கிராம மக்களின் நீண்டநாள் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, நல்லூர் – குரண்டி வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தேன்.
இந்த புதிய பேருந்து சேவை, மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட கிராம மக்களின் அன்றாட பயணத்திற்கு பெரும் பயனளிக்கும் என்பதில் மகிழ்ச்சி.
மக்களின் தேவைகளை நேரில் அறிந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் சிறு மாற்றத்தையேனும் ஏற்படுத்த முடிவது எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.
மக்களின் தேவையே எனது முன்னுரிமை… மக்கள் நலனே எனது தொடர்ச்சியான பயணம்!