
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பெருங்குடி வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சட்டப் பள்ளி மாணவர் விடுதியின் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டியதிலும், வளாகத்தில் மரக்கன்றை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான எங்கள் அரசின் உறுதியை வெளிப்படுத்தியதிலும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி உள்கட்டமைப்பை வழங்குவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசின் முக்கிய நோக்கமாகும்.
இந்தக் கட்டிடப் பணிகளை தரத்தில் எந்த சமரசமும் இன்றி, விரைந்து முடிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அந்த இலக்கை முழுமையாக நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது.
அன்பு மாணவ, மாணவியர்களே, நீங்கள் சிறந்த சட்ட வல்லுநர்களாகவும், சமூக நீதியைக் காக்கும் பொறுப்புள்ள குடிமக்களாகவும் உயர்ந்து தமிழ்நாட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.