
இன்று 28.06.2026, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில், நகரத்தார் பிரீமியம் லீக் (Nagarathar Premium League) சார்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விளையாட்டு என்பது உடல் திறனை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் முக்கியமான தளமாகும். போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.