web analytics

60 ஆண்டுகால பேருந்து வசதி கோரிக்கை நிறைவேறியது: மூத்தான்குளம் கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar launches a new bus service for the residents of Moothankulam village in Thiruparankundram constituency

சுமார் 60 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத மூத்தான்குளம் கிராமத்திற்கு, பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று CTR நிர்மல் குமார் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.

21 ஆண்டுகால சோளங்குருணி கோயில் பாதை பிரச்சனைக்கு தீர்வு பெற்ற CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar with Cholaguruni village residents after the resolution of the long-pending temple access road issue

21 ஆண்டுகளாக நீடித்து வந்த சோளங்குருணி கிராம கோயில் பாதை பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து, பொதுமக்கள் எந்தத் தடையும் இன்றி கோயிலுக்குச் செல்லும் வகையில் பாதை மீட்கப்பட்டது.

நகரத்தார் பிரீமியம் லீக் கிரிக்கெட் போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கிய CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar presents prizes to winners of the Nagarathar Premium League cricket tournament at Thiagarajar College of Engineering, Madurai

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நகரத்தார் பிரீமியம் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு CTR நிர்மல் குமார் பரிசுகள் வழங்கினார்.

நாகமலை புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar provides welfare assistance to the public at Nagamalai Pudukottai in Madurai

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை CTR நிர்மல் குமார் வழங்கினார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு CTR நிர்மல் குமார் நன்றி

CTR Nirmal Kumar with Su Venkatesan MP and Manickam Tagore MP at the Thiruparankundram Assembly office inauguration

திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைக்க எங்களது அழைப்பை, தங்களது இடைவிடாத பணிகளுக்கு மத்தியிலும் ஏற்று வருகை தந்து நிகழ்வை சிறப்பித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. ப. மாணிக்கம் தாகூர் அவர்களுக்கும் எனது சார்பாகவும், திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருப்பரங்குன்றம் வலையங்குளத்தில் நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் பங்கேற்ற CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar participates in a welfare assistance and annadanam event at Valaiyangulam in Madurai

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வலையங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் CTR நிமல் குமார் கலந்து கொண்டார்.

திருப்பரங்குன்றத்தில் கபடி போட்டியை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar inaugurates a Kabaddi competition in Avaniyapuram, Madurai

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற கபடி போட்டியை CTR நிமல் குமார் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததானம் வழங்கிய CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar donates blood at a blood donation camp in Madurai

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று 20.06.2026, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியின் வடக்கு பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினோம். இரத்ததானம் என்பது உயிர்களை காக்கும் உயரிய மனிதநேயப் பணியாகும். இந்நிகழ்வில் இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். CTR Nirmal Kumar

அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம்: திருப்பரங்குன்றம் பெருங்குடியில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சி. டி. ஆர். நிர்மல் குமார்

CTR Nirmal Kumar pays tribute to Dr. B.R. Ambedkar on his birth anniversary

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, திருப்பரங்குன்றம் பெருங்குடியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சி. டி. ஆர். நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.