web analytics
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்யும் CTR நிர்மல் குமார்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மின்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்ட CTR நிர்மல் குமார்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வது தொடர்பாக, மின்துறை சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்துறை அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் இன்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மழைக்காலத்தில் மின்தடை மற்றும் மின்சார விபத்துகளைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மின்கட்டமைப்புகளின் பராமரிப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மக்களுக்கு பாதுகாப்பான, சீரான மற்றும் தடையற்ற மின்சார சேவை வழங்குவதே நமது முதன்மையான நோக்கம்.

CTR Nirmal Kumar