web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.486.88 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்த போது
திருப்பரங்குன்றம் தொகுதியில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்த CTR Nirmal Kumar.

இன்று (05.11.2026), மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சி.புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.486.88 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளைத் திறந்து வைத்தேன்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் சி.புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாகக் கட்டப்பட்டுள்ள எட்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம், தோப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம், பெரிய ஆலங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் ஆகியவற்றையும்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையக் கட்டடம், திருப்பரங்குன்றத்தில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு மற்றும் அலுவலகக் கட்டடம், மதுரை மாநகராட்சி மண்டலம் 5, வார்டு எண் 94, திருநகரில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தின் கூடுதல் கட்டடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தேன்.

இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டியன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ் குமார், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

CTR Nirmal Kumar