
இன்று (31.10.2026), மதுரை மாநகராட்சி மண்டலம் 2, வார்டு எண் 22, அருள்தாஸ்புரத்தில், 15-ஆவது மாநில நிதிக்குழுத் திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூடுதல் கட்டடத்தைக் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டேன்.
இந்நிகழ்வில் மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் திரு. மதார் பதூருதீன், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டியன், மாநகராட்சி துணை மேயர் திரு. தி. நாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ் குமார், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.