web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

அமைச்சர் CTR Nirmal Kumar தூத்துக்குடி அனல் மின் நிலைய அலகு 1 சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்த நிகழ்வு
தூத்துக்குடி அனல் மின் நிலைய அலகு 1 சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர் CTR Nirmal Kumar.

இன்று (17.11.2026), தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அலகு – 1 மற்றும் அலகு – 2 ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டேன்.

மேலும், அலகு – 1-இன் சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்து, அனல் மின் நிலைய வளாகத்தில் மரக்கன்றையும் நட்டேன்.

இந்நிகழ்வில், கூடுதல் தலைமைச் செயலாளர் / மின்வாரியத் தலைவர் திரு. ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., அவர்கள், மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் (முழுக் கூடுதல் பொறுப்பு) திரு. பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு. கு. சரவணன் அவர்கள், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக இயக்குநர் (தொழில்நுட்பம்) திரு. ஜான் டால்டன் அவர்கள் மற்றும் அனல் மின் நிலையத் தலைமைப் பொறியாளர் திரு. பிரபாகர் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

CTR Nirmal Kumar