
இன்று (04.11.2026), தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.4.97 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற 9 புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, ரூ.11.83 கோடி மதிப்பீட்டில் 333 புதிய கட்டமைப்புப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்.
மேலும், 7,029 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.71.37 கோடி மதிப்பிலான வங்கி நிதி இணைப்புக் கடன்களுக்கான காசோலைகளையும், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 2,409 பயனாளிகளுக்கு ரூ.1.51 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன்.
தொடர்ந்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்று, காவலர் பணிக்குத் தேர்வான 12 வெற்றியாளர்களைப் பாராட்டி கௌரவித்தேன்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வ. சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. க. சபரிஐங்கரன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டியன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ப. ராஜகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.