
இன்று (31.10.2026), மதுரை மாவட்டம், செக்காணூரணியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் செக்காணூரணி பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் கூட்டுறவு சுயசேவைப் பிரிவில், ஊரகப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில், அத்தியாவசிய மளிகைப் பொருட்களை நியாயமான விலையில் வழங்கும் நோக்கில், ரூ.200/- மதிப்பிலான ஒருங்கிணைந்த சிறப்பு மளிகைப் பொருட்கள் தொகுப்பு விற்பனையைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு வழங்கினேன்.
இச்சிறப்புத் தொகுப்பில் கடலைப் பருப்பு (250 கிராம்), பாசிப் பருப்பு (250 கிராம்), மிளகாய் வத்தல் (100 கிராம்), தனியா (150 கிராம்), பூண்டு (150 கிராம்), புளி (250 கிராம்), கடுகு (100 கிராம்), உடைத்த உளுத்தம் பருப்பு (100 கிராம்), சீரகம் (50 கிராம்), சோம்பு (10 கிராம்) என மொத்தம் 10 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்வில், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டியன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.வி. கருப்பையா மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.