web analytics
திருநகர் பூங்காவில் சமூகசேவகர்கள் மற்றும் விளையாட்டு போட்டி வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கும் CTR நிர்மல் குமார்
திருநகர் பூங்காவில் நடைபெற்ற சமூகசேவகர்கள் மற்றும் விளையாட்டு போட்டி வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் CTR நிர்மல் குமார்.

நேற்று (23.08.2026), மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநகர் பூங்காவில், வாசன் கண் மருத்துவமனை குழுமம் சார்பில் நடைபெற்ற சமூகசேவகர்களுக்கான விருது வழங்கும் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டேன்.

சமூக நலனுக்காக தன்னலமின்றி சேவையாற்றி வரும் சமூகசேவகர்களை கௌரவிப்பதும், விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிப்பதும் சமூக முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகும். இந்நிகழ்வில் விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி அனைவரையும் வாழ்த்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சமூக சேவையிலும் விளையாட்டுத் துறையிலும் தொடர்ந்து சிறந்து விளங்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

CTR Nirmal Kumar