web analytics
CTR Nirmal Kumar interacts with lawyers and senior legal professionals at the Madras Bar Association reception in Chennai
மெட்ராஸ் பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த சட்ட வல்லுநர்களுடன் கலந்துரையாடிய CTR நிர்மல் குமார்.

நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் பெருமைமிக்க மெட்ராஸ் பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வழக்கறிஞர்கள், மூத்த சட்ட வல்லுநர்கள் மற்றும் நீதித்துறை சார்ந்தோருடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சி அடைந்தேன்.

நீதிமன்றங்களில் வழக்குகளின் தேக்கத்தை குறைப்பது, நீதிமன்ற உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவது, வழக்கறிஞர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான நீதி கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவை எங்கள் அரசின் முக்கிய முன்னுரிமைகளாகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நீதித்துறையை மேலும் வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து, தமிழ்நாட்டை நீதி நிர்வாகத்தில் முன்னோடி மாநிலமாக உருவாக்க உறுதிபூண்டுள்ளோம்.

நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த மெட்ராஸ் பார் அசோசியேஷன் நிர்வாகிகளுக்கும், வழக்கறிஞர் பெருமக்களுக்கும், அன்புடன் வரவேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

CTR Nirmal Kumar