
இன்று (04.11.2026), மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் (DISHA) கலந்து கொண்டேன்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகள், அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களைச் சென்றடையும் விதம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தங்க தமிழ்ச்செல்வன், மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டியன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. அ. கல்லாணை, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.வி. கருப்பையா, மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் திரு. மதார் பதூருதீன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.எம். கோபிசன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ம. விஜய், மாநகராட்சி துணை மேயர் திரு. தி. நாகராஜன், மாநகரக் காவல் ஆணையர் திரு. எஸ். ராஜேந்திரன், இ.கா.ப., மாநகராட்சி ஆணையர் திரு. கௌரவ் குமார், இ.ஆ.ப., மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. ந. தேவநாதன், மாவட்ட வன அலுவலர் திரு. ரேவ்தி ரமன், இ.வ.ப., உசிலம்பட்டி சார் ஆட்சியர் திரு. உட்கர்ஷ் குமார், இ.ஆ.ப., மற்றும் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் திரு. சா. சதீஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.