
இன்று (04.11.2026), மதுரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக் கலையரங்கத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 14,649 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.137.01 கோடி மதிப்பீட்டில் தொழில் முனைவோருக்கான வங்கி நிதி இணைப்பு ஆணைகளை வழங்கினேன்.
இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டியன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. அ. கல்லாணை, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.எம். கோபிசன், மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் திரு. மதார் பதூருதீன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ம. விஜய் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ் குமார், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.