web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது
கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய CTR Nirmal Kumar.

இன்று (30.10.2026), மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தியபோது.

இந்நிகழ்வில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு. பி. மதன்ராஜா அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. வி.கே. ராஜீவ் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ்.ஆர். தங்கபாண்டியன் (மதுரை மேற்கு), திரு. எம்.வி. கருப்பையா (சோழவந்தான்), திரு. எம்.எம். கோபிசன் (மதுரை தெற்கு), திரு. பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா (கம்பம்), திரு. ஆர். சீனிவாச சேதுபதி (திருப்பத்தூர்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.