
இன்று (14.11.2026), தேனி மாவட்டம், அரண்மனைப்புதூர் விலக்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினேன்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வ. சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா (கம்பம்) அவர்கள், திரு. க. சபரிஐங்கரன் (பெரியகுளம்) அவர்கள், திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டி (மதுரை மேற்கு) அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.