
இன்று (14.11.2026), தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட சுருளி அருவியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய **“தென்றல் தவழும் சுருளிச் சாரல் திருவிழா”**வைக் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தேன்.
மேலும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இசைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கேடயங்களை வழங்கிப் பாராட்டி, பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 35 கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டேன்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வ. சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அவர்கள், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டி அவர்கள், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி) திரு. துஷார் ஸ்ரீஹர் ஷிண்டே, இ.வ.ப., அவர்கள், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு. வீராச்சாமி அவர்கள், மாவட்டச் சுற்றுலா அலுவலர் திரு. பாஸ்கரன் அவர்கள், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் திரு. சையது முகைதீன் இப்ராஹிம் அவர்கள், உத்தமபாளையம் வட்டாட்சியர் திரு. பாலசண்முகம் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.