
இன்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் மாநில அளவிலான அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் 2026–27-ஐ தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாடு முழுவதும் 23 சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவ–மாணவியர் பங்கேற்கும் இப்போட்டிகள், அவர்களின் விளையாட்டுத் திறன், ஒழுக்கம், தலைமைப் பண்பு மற்றும் குழு உணர்வை மேம்படுத்தும் சிறந்த வாய்ப்பாக அமையும்.
சிறப்பாக செயல்படும் வீரர்கள், அகில இந்திய பல்கலைக்கழக தடகளப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட உள்ளனர்.